பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 தமிழர் நாட்டுப் பாடல்கள்

இவ்வாறு கதைப்பாடல் காலச் சமூகத் தேவைக்கேற்பத் தோன்றி, நிரந்தர கலைமதிப்புகளை ஏற்படுத்திவிட்டு, உருவழிந்து போய்விடும். நிரந்தர மரபுகளையொட்டியோ, எதிர்த்தோ புதிய கதைப்பாடல் உருவங்கள் தோன்றும். கதையுருவங்கள், அச்சானவுடன் பரவல் அதிகமாகிறது. மீண்டும் வாய்மொழிப் பரவலுக்குச் செல்வதுமுண்டு. அது வாழும் மரபாக இருந்தால் வாய்மொழிப் பரவலுக்குச் சென்று விடும். இல்லாமல் இருந்தால் ஆவணமாகவும், எல்லோருக்கும் தெரிந்த இறந்துவிட்ட மரபாகவும் ஆகிவிடும். ஆகையால் சிறுகி வருகிற கதைப்பாடல்கள், பாடல்கள், கூத்துக்கள் அனைத்தையும் சேகரித்து வெளியிட வேண்டும். எனவே எழுத்தில் பரவுவது, வாய்மொழிப் பரவலைவிட விரிவானது. எழுத்தில் பரவும் நாட்டார் பண்பாட்டுப் படைப்புகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வழங்கும் என்பதில்லை. வாழுகிற மரபு (Living Tradition) என்பது எந்நாளும் வாழுகிற மரபு அன்று. சமூகப் பண்பாட்டு மாறுதல் ஏற்படும் வரை ஒரு மரபு வாழும். பிறகு சிறுகத் தேய்ந்து புதிதாக உள்ள பண்பாட்டுப் படைப்புகளோடு சேர்ந்து புத்துருவம் கொள்ளும். தற்போது செவிவழிப் பரவலுக்குக்கூட முன் நிபந்தனையாக எழுத்துவடிவம் இருக்கிறது. 'கொலைச்சிந்து என்றோர் பாடல் வடிவம் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் உள்ளது. இது ஒரு வாழும் மரபாகும். கொலைகள் சமூகப் பின்னணியில் நடைபெறுகின்றன. நீதிமன்றம் கொலையாளி என்று தீர்ப்பளித் துத் தண்டிப்பவர்களை, நாட்டார், வீரன் என்று போற்றி அவனது தண்டனையைப் பற்றிக் கருத்துச் சொல்லுகின்றனர். கொலைகள் விதிப்படி நிகழுவதில்லை, சமூக காரணங்களால் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டி, அக்காரணங்களை ஆராய்கின்றன. கொலைச் சிந்துகள். நூற்றுக்கணக்கான கொலைச் சிந்துகள் சுழற்சியில் உள்ளன. இவை நாட்டுப் புலவர்களால் பாடப்பட்டு, எழுதப் பட்டு, அச்சடிக்கப்பட்டு 10,000 பிரதிகள் விலையாகின்றன. நாட்டுப்பாடகர்கள், அவற்றை மனப்பாடம் செய்து பாடுகிறார் கள். இது ஒரு நாட்டார் மரபு (Folk Tradition இங்கு ஒரு மாற்றம் காணப்படுகிறது. (1) வாய்மொழிப் பரவல் - அச்சிடல்- (அதிகப் பரவல்) Folk Lore epidoso. (2) அச்சிடல் - வாய்மொழிப் பரவல் - அதிகப் பரவல் Folk Lore.