பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஆண்: மறக்கல என்னு சொல்லி வலக்கையும் தந்திடுவேன் வலக்கையும் தந்திடுவேன் வருண சத்தியம் செஞ்சிருவேன் மீனாட்சி கோயிலுல வேட்டி போட்டுத் தாண்டித் தாரேன் வட்டார வழக்கு காஞ்ச-காய்ந்த சேக்கு-கிராப்பு ஒலை-உலை. சேகரித்தவர். இடம்: S.M. கார்க்கி சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம். ஆசைவைத்தேன் ரத்தினமே! அரூர் சந்தையில் தனது காதலியை அவன் கண்டு கொண்டான். வேலை முடிந்ததும் அவள் ஊருக்குப் புறப்பட் டாள். அவனும் பின் தொடர்ந்தான். வழியில் யாரும் இல்லை. அவன், அவள் மீது கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்திப் பாடுகிறான். அரூருப் பேட்டையிலே அழகான சந்தையிலே ஆலமரத்தடியில்-சின்னத்தங்கம்-நீ ஆய்ந்தெடுத்த ரத்தினமோ? சொன்னாலும் ஆகாது சொல்லவும் கூடாது கண்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என் கருமமெல்லாம் தொலைஞ்சி போகும் கட்டாணி முத்தோ-நீ? கற்கண்டோ சர்க்கரையோ? தொட்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என் தொந்திரவு நீங்குமடி ஆசைக் குகந்தவளே ஆசார மானவளே நேசித்தால் எந்தனுக்கு-சின்னத்தங்கம் நினைவு தடுமாறுதடி பதினாறு பக்கத்துக்கும் மதிவு நிலா உன் முகமோ?