பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 தமிழர் நாட்டுப் பாடல்கள்

வட்டார வழக்கு: ஒத்தை-ஒற்றை, சருக்-பதற்றம்: நெருக்-படபடப்பு: கொசகணம்-கொசுவம்; சேந்தும்அள்ளும்.

சேகரித்தவர்: இடம்: S, சடையப்பன் அரூர் வட்டம்,

            தருமபுரி மாவட்டம்.
      வரக் காணலியே

காதலன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை; அவள் அவனை நினைந்து பாடுகிறாள்.

ஆளுலகம் குட்டை அழகுலயும் பூஞ்சிவப்பு நடையிலேயும் நைச் சிவப்பை நடுத் தெருவில் காணலியே! பூசரம் பழுப்பளகே புவன சுந்தர நடையழகே சிருப்பாணிக் கேத்த தங்கம் தினம் வருமா இந்த வழி: படுத்தா உறக்க மில்ல பாய்விரிச்சா துக்கம் வல்ல சண்டாளன் தலைமயித்த தலைக்கு வச்சா தூக்க முண்டு. கரும்பா இணங்குனனே கருத்த மத யானையிடம் துரும்பா உணருரனே துடிக்ாரா உன்னாலே வந்திராதோ இந்த வழி? வாச்சி ராதோ தங்கக் கட்டி? குடுத்திராரோ வெத்தலையை? போட்டுறுவேன் வாங்சிவக்க மேலத் தெருவுங் கண்டேன் மேகம் போல வீட்டைக் கண்டேன். தருமர் மகனை நான் தனியே வரக் காணலையே? கீழத் தெருவுங் கண்டேன், கீழ மேலு ரோடுங் கண்டேன்,