பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழர் நாட்டுப் பாடல்கள்


வட்டார வழக்கு: சதுரம்-சரீரம்; கட்டாதிய-கட்டா தீர்கள்; நிக்காதிய-நிற்காதீர்கள் என்ற எதிர்மறை வினைகள்; சாயலுல-கோணலாக, பரக்க-அகல விழித்து; முக்கு -சந்தி.

சேகரித்தவர்: இடம்:


S.S. போத்தையா விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி.


மறக்க மனம் கூடுதில்லை

ராமனைக் கண்டு காதல் கொண்ட சீதை தனித்திருந்த போது கீழ்வருமாறு சிந்திக்கிறாள்;

 பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண் வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்து அடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்வனே கொலாம்.

 இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல;
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.

(கம்பன்)

சீதையின் நிலைமையில், கிராமப் பெண்ணொருத்தி தன் மனத்தினுள் நுழைந்த இளைஞனை மனதிற்பதித்து அவனை மறக்க முடியவில்லையே என்று இன்ப வேதனையால் கேட்கிறாள்.

வெத்திலைத் தீழைகா
நித்தம் ஒரு பொட்டழகா
மைக் கூட்டுக் கண்ணழகா
மறக்க மனம் கூடுதில்லை
இஞ்சி இடுப்பழகா எலுமிச்சங்காய் மாரழகா
மஞ்சச் சிவப்பழகா
மறக்க மனம் கூடுதில்லை ஆலிலை போல் அடி வயிறு அரசிலை போல் மேல் வகிடும் வேப்பிலை புருவக்கட்டும்