பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 161

வட்டார வழக்கு: மூங்க-மூங்கில்; ரெண்டு - இரண்டு; ஒண்டிக்கலாம்-ஒளிந்து கொள்ளலாம்.

உதவியவர்: C. செல்லம்மாள் இடம்: பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சடையப்பன் அரூர், தருமபுரி மாவட்டம்.

சேர்ந்த கிளி

நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.

ஆண்: செட்டி கடை வெட்டி வேரு சிவ காசிப் பன்னிரு கட்டி மருக் கொழுந்தே கம்மாயில கூடினமே

பெண்: கூடினதில் குற்றமில்லை குலத்துக் கொரு ஈனமில்லை ஊராரு சொல்லையிலே ஊடுருவிப் பாயுதையா

ஆண்: நந்தட்டம் பாதை வழி நான் போவேன் ஒத்தவழி மின்னிட்டான் பூச்சி போல முன்னே வந்தா லாகாதோ

பெண்: கல்லுரலு மேலி ருந்தது கனிவாய நீ திறந்தா செம்பங் கிளி வாய் திறந்தா சேர்ந்த கிளி வந்திருமே

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி மாவட்டம்.

கூடப் புறப்பட்டாள்

கணவனும் மனைவியும் காலையில் அய்லூர் செல்ல முடிவு செய்திருந்தார்கள். அவன் நன்றாக உறங்கி விட்டான். அவள்