பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

195


                  செவத்தப் புள்ள கொண்டையிலே 
                  செவ்வரளிப் பூவைக் கண்டேன்
                  பழைய உறவுக்காரி 
                  பாதையிலே கண்டுக்கிட்டு 
                  அவளழுக, நானழுக 
                  அன்னக்கிளி ஒண்டழுக 

வட்டார வழக்கு: சடவு-அகதி; இண்டு-முள் மரம்; அழுக-அழ; திருணை-திண்ணை.

குறிப்பு: கம்மந்தட்ட வீடு-கூரை, கம்மந்தட்டையால் வேய்ந்திருக்கும் இத்தகைய வீடுகள் கோவில்பட்டி தாலுக்காவி லும் சங்கரன் கோவில் தாலுக்காவிலும் சில கிராமங்களிலும் காணலாம்.

சேகரித்தவர்.                                   இடம்:  
S.M. கார்க்கி                                    சிவகிரி.
                      வழி நடப்போம்!

மலையில் மாடு மேய்க்கும் இளைஞன் தனது புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். அவனுடைய காதலியை அழைக்கும் சங்கேதப் பாட்டை ஊதுகிறான். அவள் வருகிறாள். அவன் ஊதுவதை நிறுத்திப் பேச்சுக் கொடுக்கிறான். அவள் பதில் சொல்லுகிறாள். உரையாடல் மலை நீரோடை போல வளைந்து சென்று காதலின்பமென்னும் விளை நிலத்தில் பாய்கிறது.

ஆண்: வெள்ளை வெள்ளைப் பாறை

            வெள்ளாடு மேயும் பாறை 
            சீங் குழல் சத்தம் கேட்டு 
            திரும்பலயோ உந்தன் முகம்?

பெண்: மாங்கா மரமானேன்

           மறுவருஷம் பெண்ணானேன் 
           தேங்காய் மரமானேன் 
           தெரிச்ச கொண்டைக்காரனுக்கே

ஆண்: மூணு சட்டி உயரத்தில்

          முட்டைக் கோழி பருவத்தில் 
          சாதிக்கோழி சாயலோட 
          சம்பிராயம் போடாதடி