பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

199


ஆண்: முட்டுக் காட்டுக் கச்சேரிக்கு சின்னத் தாயே தங்கம் முடிவு சொல்லக் காத்திருந்தேன் சின்னத் தாயே தங்கம்

வட்டார வழக்கு: பொறா-புறா, உளுது-விழுது.

சேகரித்தவர்:
இடம்:
கவிஞர் சடையப்பன்
சேலம் மாவட்டம்.

முறைப் பாட்டு

அத்தை மகள் பேசவில்லை!

அவன் நிலக்கடலை விதைத்திருக்கிறான். கடலை மகசூல் கண்டதும் கையில் பணமிருக்கும். அத்தை மகளைக் கலியானம் செய்து கொள்ளுவான். இது அவன் கனவு.

ஆனால் மழை பொய்த்து கடலை காய்ந்து விட்டது. அவன் கவலை தேங்கிய முகத்தோடு வயலருகே உட்கார்ந்திருந் தான். அத்தைமகள் அவ்வழியே போனாள். அவன் மேல் அவளுக்கு ஆசைதான். இன்று அவள் வயலருகில் போனதை அவன் பார்க்கவில்லை. அவளுக்கு கோபம் வந்து விட்டது, நேராகப் போய்விட்டாள். பின்னர்தான் அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தன்னிடம் பேசாமமல் போவதையும் அதன் காரணத்தையும் உணர்ந்தான்.

தன் அன்பையும் தெரிவிக்க வேண்டும். தன் கவலைக்குக் காரணத்தையும் தெரிவிக்க வுேண்டும். உடனே அவள் காதில் கேட்கும்படி பாடத் தொடங்குகிறான்.

ஆண்:பண்டாரம் தோட்டத்திலே

                    பருத்திக் களை வெட்டயிலே 
                    ஒத்த வழி ஓடி வர 
                    அத்தை மக பேசலியே 
                    ஆமணக்குத் தோட்டத்திலே 
                    பூமணக்கப் போற புள்ளே 
                    பூமணக்கும் வாடையிலே-நானும் 
                    புருஷமினு வந்துட்டேனே 
                    வாகை மரத்துப் புஞ்ச 
                    வட்டாரச் சோளப் புஞ்ச