பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 தமிழர் நாட்டுப் பாடல்கள்

பெண்:மண் குடம் போனால்

     மறு குடம் வாங்கலாம் 
     பெண் குடம் போனால் 
     உலகம் பொருந்துமா 
                  மன்னவரே?

சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி,

           நெல்லை மாவட்டம். 
     கண்டதுண்டோ?
  காட்டுக்குச் சென்று மாடு மேய்க்கும் காதலனை அடிக்கடி காதலியால் காண முடிவதில்லை. அவனும் அவளைக் கண்டு பல நாட்கள் ஆயின. ஒரு நாள் காலையிலேயே எழுந்து மந்தை கிளம்பு முன், காதலி அவனைக் காண்பதற்கு ஊரின் எல்லையில் போய் நின்றாள்.அவன் வந்ததும் அவனிடம் 'பாலகனைக் கண்டதுண்டோ?' என்று கேட்கிறாள். அவன் அவளை "யாராவது அயலூர் ரோடுகளிலே பார்த்ததுண்டோ?” என்று கேட்கிறான். ஊரில் காண முடியவில்லையல்லவா? அவன் பதிலாக ஒரு பாட்டும் உள்ளது.

காதலி:கொத்துக் கடை

                மத்தாளமாம்
கொரங்குக் கல்லாம் கரடிக்கடை 
பசு மேயும் பாரமலை-ஒரு 
பாலகனைக் கண்டதுண்டோ?

காதலன்:சேத்தூரு சிமிண்டுரோடு

       சிவகிரி தாரு ரோடு 
      புளியங்குடி மண்ணு 
                  ரோடு-ஒரு
    பெண் மயிலைப் 
            பார்த்தியளா?

வட்டார வழக்கு : பார்த்தியளா?-பார்த்தீர்களா? குறிப்பு: முதல் இரு அடிகளில் வருவன, மலைச்சாரலில் குறிப்பிட்ட இடங்களின் பெயர்கள்.

சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி.

   போக மனம் கூடலியே?
ஆமான் மகன் புங்கமர நிழலில் உட்கார்ந்திருக்கிறான். கஞ்சிக்

கலயம் கொண்டு அத்தை மகள் அவ்வழியே செல்லுகிறாள்