பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 205


றாள். அவன் அவளோடு பேச்சுக் கொடுக்கிறான். “அவசரம் போலிருக்கிறது. போ, போ, ஆனால் நீ கஞ்சி குடிக்கும் போது என்னை நினைத்துக் கொள்" என்கிறான். அவளுக்கோ அவன் மேல் ஆசை. நின்று பேச விருப்பம்தான். ஆனால் சோளம் அறுவடையானதும் தாலி கட்டுவதாகச் சொன்னவன், அறுவடை முடிந்து ஒரு வாரமாகியும் எவ்விதப் பேச்சும் கொடுக்கவில்லை. தானாகப் பேச்செடுக்காமல் வழியும் இல்லை. ஆகவே ஒருவழியாக இந்தப் பேச்சைச் சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்து குளிர்ச்சியாகவே பேச்சைத் தொடங்கி பேச்சை முடித்து விடுகிறாள்.

  கொழுந்தன்: 
   கஞ்சிக் கலயம் கொண்டு
   கரை மேலே போற புள்ள
   கஞ்சி குடிக்கையிலே 
   என்னக் கொஞ்சம் 
   கண்ணே நினைச்சுக் கோடி

கொழுந்தி:

   மாமன்மகனிருக்க
   மாலையிட்ட சாமியிருக்க 
   புங்க நிழலிருக்க
   போக மனம் கூடலியே

கொழுந்தன்:

   கருசக் காட்டு புழுதியிலே
   கால் நடையாப் போற புள்ள 
   கால் நடையும் கைவிச்சும் 
   காரணமாத் தோணுதடி

கொழுந்தி:

   சோளம் விதைக் கையிலே
   சொல்லி விட்டுப் போன மச்சான் 
   சோளமும் பயிராச்சே
   நீ சொன்ன சொல்லும் 
   பொய்யாச்சே

சேகரித்தவர்: இடம்: S.M, கார்க்கி நெல்லை மாவட்டம்.


   கண்ணுக்கு உகந்த கனி 


  ஊரில் பல இளைஞர்கள் அவளைப் பெண் கேட்டு அவளுடைய பெற்றோர்களிடம் வருகிறார்கள். ஆனால் அவள் 

A519 - 14