பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 211

            காதல் 

   ஏழையடி நானுனக்கு 
   இரங்கலையோ உன்மனசு?

பெண் :

   சந்திரரே சூரியரே
   தலைக்கு மேலே வாரவரே
   இந்திரர்க்கு இளையவரே-நான் 
   என்ன சொல்லிக் கூப்பிடட்டும் 

ஆண்:

   அத்தை மகளே-நீ
   அருவங் கொடி வாயழகி 
   கோவம் பழத்தழகி-என்னை 
   கொழுந்தனிண்ணு கூப்பிடடி 
   மேற்கே சூலமடி 
   மே மலையும் கோணலடி 
   நாளைப் பயணமடி

பெண் :

   நானும் வாரேன் கூடப் போவோம்
   சேகரித்தவர்.             இடம்: S.M. கார்க்கி                சிவகிரி.
  
         விரட்டப்பட்ட மான்
   காதலர் உறவு ஊரில் தெரிந்த பின்னும் மனம் செய்து கொள்ள அவசரப்படாத காதலன் தன் காதலியைச் சந்திக்கிறான். அவளிடம் காதல் பேச்சுகள் பேசுகிறான். தனது தவறையும், இலைமறை காயாக ஒப்புக் கொள்ளுகிறான். திருமண ஏற்பாடுகளை உடனே செய்யும்படியாக அவனைத் தூண்ட வேண்டும் என்று நினைத்த அவள் அவனைக் கடிந்து கொள்கிறாள். "உன்னால் சந்தியில் என் பெயர் இழுபட்டது. என் உறவினர்களைப் பகைத்துக் கொண்டேன். விரட்டப்பட்ட மான் போலாகி விட்டேன்" என்று கூறுகிறாள். இச்சுடு சொற்களால் அவன் திருமணத்திற்கு முனைவான் என்பது அவள் கருத்து.

ஆண்:

   கட்டக் கருத்தப்புள்ள
   காலுத் தண்ட போட்ட புள்ள 
   உதடு செவத்த புள்ள 
   மெலியுதனே ஒன்னால 
   நாட்டுக்கு நாடு மட்டம் 
   நாம ரெண்டும் ஜோடி மட்டம்