பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 213

             காதல் 

ஆண்:

   எண்ணெய் தேய்த்தல்லோ
   எனக்கு முன்னே போரபுள்ள 
   எண்ணெய்ப் பளபளப்பு-என் 
   கண்ணை மிரட்டுதடி 
   எண்ணெய்க்குடம் போல 
   எழும்பி வந்த மேகம் போல 
   தண்ணிக்குடம் போல 
   தளும்புதடி என் மனசு

பெண் :

   உங்க மேனிக்குள்ள
   ஊதாக் கலர் சட்டைக்குள்ள 
   தோளிலிடும் லேஞ்சுக்குள்ள 
   தோகைமயில் ஆசை கொண்டேன்

ஆண்:

   வாழைக் கொடிக்காலே
   வட கொடிக்கால் வெத்திலையே 
   போட்டா செவக்குதில்ல 
   பெண்மயிலே உன் மயக்கம்

பெண் :

   சத்தனக்கும்பாவில
   சாதம் போட்டு உண்கையில 
   உங்களை நினைக்கையிலே 
   உண்ணுறது சாதமில்லை.
   குறிப்பு: வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும் செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது பற்றிய நம்பிக்கை முன்னரே குறிப்பிடப்பட்டது.
   சேகரித்தவர்:             இடம்: S.M. கார்க்கி                சிவகிரி


    கொழுந்தன் முகம் வாடிடாதோ?


   ஏர் கொண்டு உழச் சென்ற தன் கணவன், உச்சி வேளையாகியும் வீடு திரும்பவில்லை என்பதைக் கண்ட மனைவி கவலை கொள்ளுகிறாள். ஒரு வேளை சீக்கிரமே உழுது முடித்து விட்டுத் தழை உரத்துக்காக வண்டி கட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டானோ? வேலை செய்து அலுத்துப் போனால் வீடு வந்து ஓய்வு கொண்டு பின்னர்