பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

      தமிழர் நாட்டுப் பாடல்கள்

செல்லக்கூடாதா? அவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை? காட்டுக்குப் போகும் பாதையில் கணவனது நண்பர்களை வழியில் காண்கிறாள். அவர்களைப் பார்த்து அவள் கவலையை வெளியிட்டுக் கீழ் வரும் பாடலைப் பாடுகிறாள்.

   மத்தியானம் ஏரவிழ்த்து
   மாடு ரெண்டும் முன்னே விட்டு 
   சாட்டக்கம்பு தோளிலிட்டு 
   சாமிவரக்கண்டியளோ? 
   இடை வாரு போட்டவரே 
   இட கொஞ்சம் சிறுத்தவரே 
   பாதம் சிறுத்தவரே-பெரும் 
   பாதையிலே கண்டதுண்டோ? 
   கொழிஞ்சி குழை புடுங்கி 
   கொழுந்தன் வண்டிப் பாரமேத்தி 
   கொழிஞ்சிக் குழை வாடினாலும் 
   கொழுந்தன் முகம் வாடிராதோ? 
   வாடக்கொடி புடுங்கி 
   வடகாடு சுத்திவந்து 
   தேடிக் குழை புடுங்கும் எந்தன் 
   தேன் மொழியை கண்டதுண்டோ?
   
   வட்டார வழக்கு : சாட்டக்கம்பு - சாட்டைக்கம்பு; போட்டவரே - போட்டவரை, சிறுத்தவரே - சிறுத்தவரை, புடுங்கி-பிடுங்கி; வாடிராதோ - வாடிடாதோ, தேன்

மொழி-பொதுவாக பெண்முன்னிலை ஆண்முன்னிலையா


   சேகரித்தவர்:              இடம்:

S.M. கார்க்கி சிவகிரி,

                 நெல்லை மாவட்டம்.


     அத்தை மகன் முத்துச்சாமி
    முத்துச்சாமி, முத்தம்மாளின் முறைமாப்பிள்ளை. கேலி செய்யும் போக்கில் அவள் தலையில் சூடியிருந்த பிச்சிச்சரத்தை அறுத்தெறிந்தான். மலர் சூடுவதற்கு பதில் மலரைச் சிதைப்பது அமங்கலமென அவள் எண்ணினாள். பொய்க்கோப முகங்காட்டி அவனைக் கடிந்து கொள்கிறாள். "என்னை விரும்பாத உன்னை