பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



216

தமிழர் நாட்டுப் பாடல்கள்

தோடு பதில் சொல்லுகிறாள். ஒரு புறம் அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும் அவள் தன் அண்டை வீட்டு அருமைப் பையன் மருமகனான விந்தையை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

தாய்: ஏழு மலை கழித்து
       ஈஞ்சறுக்க போற மக்கா- உன் 
       கண்ணு செவந்த தென்ன 
       களவு மெத்த ஆனதென்ன?
மகள்: கண்ணு செவக்கவில்லை
       களவு மெத்த ஆகவில்லை-உன் 
       ஆசை மகனாலே-நான் 
       அருமை கொறைஞ் சேனம்மா
தாய் : ஆசை மகனே நீயே
        அருமையுள்ள புத்திரனே 
        மாய மகனே நீயே-இப்போ 
        மரு மகனாய் ஆனதென்ன?
சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
நெல்லை மாவட்டம்

திரிஞ்சநாள் போதுமையா

பல நாட்களாகக் காதலர்கள் சந்திப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. ஒருநாள் வேலைக்குப் போகிறவழியில் அவள் அவனைக் கண்டு விட்டாள். அவள் தனது அன்பையும், பிரிவுத் துன்பத்தையும் விளக்கி அவனிடம் சொல்லுகிறாள். எத்தனை காவல் இருந்தாலும், குண்டு போட்டுச் சுட்டாலும் அத்தனையும் மீறிக்கொண்டு அவனிடம் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லுகிறாள். ஆனால் அவன் அவளை வெளியூருக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நடுச் சாமத்தில் அவள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறான். ஆனால் அவளோ 'திரிந்த நாள் போதும்" என்று ஒரே வார்த்தையில் சொல்லுகிறாள். இருந்து வாழ வழிபார்க்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறான் இப்பாடலில்.

காதலி : நறுக்குச் சவரம் செய்து
         நடுத் தெருவே போறவரே