பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

219


              கீழத் தெருவிலே யோ 
              சிலுக்குப் போட்ட கருணைப்புறா 
              மேலத் தெருவில போய் 
              மேயுதுண்ணுகேள்விப்பட்டேன் 
              ராமக் கரும்பு நீயே 
              ராவு திண்ண சருக்கரையே 
              சீனிப் பிலாச் சுனையை 
              தின்னணுண்ணு பேரெத்தேன் 
              பூசணிப் பூவே நீ பொழுதிருக்கப் பூத்த பூவே 
              நாதியத்த பூவாலே 
              நான் ஒரு நாச் சொல் கேட்டேன்

வட்டார வழக்கு: நாசமத்த-நாசமுற்ற, சமைஞ்சிருக்க - ருதுவாகியிருக்க, அருணாக்கொடி-அரை நாண் கொடி, ராமக்கரும்பு-நாமக்கரும்பு.

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
விளாத்திகுளம்,
நெல்லை மாவட்டம்

உலகம் பொறுக்குதில்லை

முன் பாடலில் வரும் காதலி பாடுவதைப் போலவே இப் பாடலிலும் ஓர் காதலி தன் காதல் ஊரில் வெளியாகி விட்டதை எண்ணி வருந்துகிறாள். காதலன் காதில் எட்டும்படி தனது கவலையைப் பாட்டில் கூறுகிறாள். அவனும் தன்னைப் பற்றியும் பிறர் தூற்றுவதை அவளுக்குத் தெரிவிக்கும் முறையில் பாடுகிறான்.

  பெண்: எண்ணெய்த் தலை முழுகி
           என் தெருவே போறவரே 
           பாராதீரு என் முகத்தை 
           பழிகள் வந்து சேர்ந்திருமே 
           ஆலமரமுறங்க 
           அடி மரத்து வண்டுறங்க 
           உன்னோட நானுறங்க 
           உலகம் பொறுக்குதில்லை 
           கல்லோட கல்லுரச 
           கடலுத் தண்ணி மீனுரச