பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/232

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

232 தமிழர் நாட்டுப் பாடல்கள்

வட்டார வழக்கு: பொகலை-புகையிலை;பொகிடி-ஒரு அணி;மஞ்சா-மஞ்சள்.

சேகரித்தவர்: சடையப்பன் இடம்:

                       அரூர்.
   இது போன்ற வண்டிக்காரன் பாட்டுகள் தூத்துக்குடியருகிலும் பாடப்படுகிறது.அவற்றுள் ஒன்று வருமாறு:

மூடை பிடிக்கும் வண்டி

முதலூர் போகும் வண்டி

மூடை விலை ஆனவுடன்

மூக்குத்தி பண்ணிப் போடுறேனே

தகரம் பிடிக்கும் வண்டி

சாத்தான்குளம் போகும் வண்டி

தகரம் விலை ஆனவுடன்

தாலி பண்ணி போடுறேனே

வெங்காயம் பிடிக்கும் வண்டி

வெள்ளூர் போகும் வண்டி

வெங்காயம் போனவுடன்

வெள்ளிக் காப்பு போடுறண்டி.

சேகரித்தவர்: M.P.M.ராஜவேலு இடம்:

                 மீளவிட்டான்,
         தூத்துக்குடி வட்டாரம்,
           நெல்லை மாவட்டம்.


       சிவத்தக் கிளி

வேலை முடிந்து தனியாகவரும் இளமங்கை ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு நடக்கிறாள். எதிரே அவள் காதலன் வருகிறான். அவனைப் பார்த்ததும் அவள் நாணம் கொண்டு பாட்டை நிறுத்திவிட்டு தலைகவிழ்ந்து நிற்கிறாள். அவன் அவளை நோக்கிப் பாடுகிறான்.

ஆத்துக்குள்ளே ரெண்டரளி

ஆறுமுகம் வச்சரளி

சுத்திவந்து பூவெடுக்கும்

சுத்தமுள்ள பத்தினியே!

வளைவு ரோட்டுப் பக்கத்திலே

வருகுதையா செவத்தக் கிளி