பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/233

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காதல் 233

சலசலன்னு வந்த கிளி

தலை கவிழ்ந்த மாயமென்ன?

கட்ட கட்ட உச்சி நேரம்

கடுவா புலி வார நேரம்

ஒருத்தன் கையிப் பத்தினியே

ஒத்தையிலே நிக்குறாளே!

ரோட்டோரம் வீட்டுக் காரி

ரோசாப்புச் சேலைக்காரி

காத்தோரம் கொண்டக்காரி கண்ணக்

கண்ண வெட்டுறாளே!

புள்ளி ரவுக்கைக்காரி

புளியம்பூச் சேலைக்காரி

புள்ளி ரவுக்கை மேலே

புதுமணம் வீசுதடி

நடைபலகை மிதிகிணறு

நாணயமா போறபிள்ளா

பொடி நடையும் புருவக்கட்டும்

போகமனம் கூடுதில்ல

மாங்கா நிறத்துப் பிள்ளா மாநிறத்துப்

பள்ளப் பிள்ளா தேங்கா நிறத்துப்

பிள்ளா தேடுறனே உம் புருசன்

வட்டார வழக்கு: தேடுறனே-தேடுகிறேனே; ரெண்டரளி -இரண்டரளி, கவிந்த-கவிழ்ந்த காத்தோரம்-காதோரம்; பிள்ளா-பெண்(நாடார்சாதி வழக்கு)

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு

                      இடம்: 
         தூத்துக்குடி வட்டாரம்.
     எம் புருஷன் 

மணமானவுடன் கணவன் அயலூர் சென்று விட்டான். மனைவியின் தோழிமார் அவளுடைய புருஷன் உருவத்தைப் பற்றிக் கேலிப் பேச்சுப் பேசுகிறார்கள். அனேகமாக இவ்விதப் பேச்சுகளுக்கு புதுமணப் பெண், நாணத்தால் பதில் கூறாமல் இருந்து விடுவாள். ஆனால் தைரியமிக்க இப்பெண் தன் புருஷனின் பெருமையை தோழியரிடம் விளக்கிக் கூறுகிறாள்.

ஆளுலேயும் கட்டயாளு

அழகிலேயும் பூஞ்சிவப்பு