பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/234

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

234 தமிழர் நாட்டுப் பாடல்கள்

மார்வு அடர்ந்த எம்மச்சான் மறக்க மனம் கூடுதில்ல ஈத்தம் குருத்து போல இடை சிறுத்த எம்மச்சான் வாழைக்குருத்து போல வாச்சாரே, எம்புருஷன்

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு

                     இடம்: 
         தூத்துக்குடி வட்டாரம்.
   சொந்தக் கணவன்

காதலனை உடனடியாகத் தாலி செய்து கொண்டு வந்து பெண் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. அவன் அசட்டையாக இருக்கவே அவள் கடிந்து கொள்ளுகிறாள். மறுநாள் அவனை அவள் சந்திக்க குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், பேசாமல் கோபமாயிருப்பது போல நடிக்கிறாள். அவன் நயமும், பயமுமாகத் தன் உணர்ச்சிகளை அவளிடம் கூறுகிறான்.சொந்தக் கணவன் என்று அவன் தன்னை வருணித்துக் கொள்ளும் வரை அவள் பேசவில்லை.அதன்பின் அவள் முகம் மலர்ந்திருக்குமா? கடைசிவரை படியுங்கள்.

பருத்தி எல பிடுங்கி

பச்சரிசி மை சேர்த்து

சேர்ந்துதோ சேரலியோ

செவத்தப் பிள்ள நெத்தியிலே.

இருப்பான கிணத்துக் குள்ளே

இருந்து தலை முழுகும்போது

கரும்பான கருத்தக் குட்டி

கைகடந்த மாயமென்ன?

காலாங்கரை ஓடையிலே

கண்டெடுத்த குண்டுமுத்து

குண்டு முத்தைப் போட்டுவிட்டு

சுண்டி முகம் வாடுறாளே

வாளு போல அருவா கொண்டு வரப்புப்

புல்லு அறுக்கும் போது

நீ தெம்பாச் சொன்ன சொல்லு

ரம்பம் போட்டு அறுக்குதடி

தண்டட்டி போட்ட பிள்ளா

தயவான சொல்லுக் காரி