பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/237

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காதல் 237

ஐயோ மச்சான் கையைவிடும் கை வளைய சேதமாகும்

காதலன்:

அத்தை மகளையின்னு

பச்சை குத்தி நான் வளர்த்தேன்

பச்சை அழிஞ்சுதுண்ணு

பக்கம் கையி போட்டதென்ன?

காதலி:

ஆடி மழை ஜோடி மழை

அம்மாசி மின்னிருட்டு

தேடி வரவும் வேண்டாம்

தென்னைமரம் அடையாளம்.


குறிப்பு: தென்னைமரம் அடையாளம் நேரே வாருங்கள். தேடி வரவேண்டாம் என்பது குறிப்பு.

சேகரித்தவர்: இடம்: M.P.M.ராஜவேலு தூத்துக்குடி

                  வட்டாரம்,
           நெல்லை மாவட்டம்.


இரும்பாய் உருக வேண்டாம்


காதலர்கள் சந்திக்கிறார்கள். தன்னுடைய பெற்றோர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பணக்காரனுக்கு தன்னைக் கட்டிக் கொடுக்கப் போவதாக காதலி சொல்லுகிறாள். பருவ காலத்தில் தானே பயிரிட வேண்டும். இல்லாவிட்டால் அறுவடைப் பருவம் தவறிவிடும். காதலித்தால் உரிய காலத்தில் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் என்று இலைமறை காயாக அவள் அவனுக்கு உணர்த்துகிறாள். அவளை நினைத்து உருகும் அவளுக்கு அவன் என்ன உறுதி சொல்லுவான்?'தூரக்காரனை' கலியாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறான். எப்படியாயினும் அவளுக்கு வாழ்வளிக்க அவன் உறுதி கொண்டு விட்டான்.

ஆண்:

பட் பட்டென்று நிலாவடிக்க

பாலத்திலே நான் நிக்க

மின்னுட்டான் பூச்சி போல

மின்ன வந்தால் ஆகாதோடி?

பெண்;

ஆசையிருக் குதையா

அழகு திரு மேனிமேலே

A519-16