பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
243

காதல்


எல்லோரும் கொண்டையிலே ஈரிருக்கும் பேனிருக்கும்
தட்டுவாணி கொண்டையிலே தப்பாமல் பூவிருக்கும்
அஞ்சாறு வீட்டுக்காரி
அதிலே ஒரு பாட்டுக்காரி
பாட்டுப் படிப்பாளாம்
பயல்களைப் பார்ப்பாளாம் கண்டியிலே பெண்டாட்டி கடலோரம் வைப்பாட்டி துரத்துக்குடி மந்தையிலே துட்டுக்கொரு பெண்டாட்டி

வட்டார வழக்கு: வேலைக்காட்டு - வேலிக்காடு; குன்னாய்-குறுநாய் (அது மறைந்து மறைந்து செல்லும்); துட்டு - பழைய நான்கு காசுகள்.

குறிப்பு: மனமொத்த மனைவி கிடைப்பது கடினம். வைப்பாட்டி மலிவாகக் கிடைப்பாள் என்று குலப்பெண்கள் இழிவாகப் பேசுகின்றனர்.

சேகரித்தவர்.
இடம்:
M.P.M.ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்.
நெல்லை மாவட்டம்.

ஓடிட்டாலும் குத்தமில்லை!

காதலன் அவசரக்காரன்.அவனுடைய திடீர் நடவடிக்கைக ளால் காதலர் உறவு வெளிப்பட்டு விடுகிறது. அவள் அடிக்கடி வெளியே வர முடியவில்லை. வந்தாலும் யாரையாவது கூட அனுப்பி வைக்கிறார்கள். அவன் அதற்குப் பிறகும் அவளை மணந்து கொள்ளும் வழியை நாடாமல் கதவைத் தட்டுவதும், கல்லெறிவதுமாக அலைகிறான். அவள் ஒடிப்போகலாம். அதற்காவது தைரியமுண்டா? என்று அவனைக் கேட்கிறாள்.

சோளபுரத்திலேயோ-இரண்டு ஜோடிப் புறா தான் வளர அருகிலுள்ள மாடப் புறா-இப்போது
ஆளைக் கண்டு கூவுதடி ஒருத்திக்கு ஒரு மகன்டி