பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244

தமிழர் நாட்டுப் பாடல்கள்


உன்னை நம்பி வந்தவன்டி
கைதவற விட்டியானால் கடுமோசம் வந்திடுமே
வெள்ளி நிலா வடிக்க விட்டுக்குள்ளே நான் படுக்க தள்ளிக் கதவடைக்கச்
சம்மதமா உன் மனசு?
கல்லால் எறிஞ்சு பாத்தேன் கதவையும் தட்டிப் பாத்தேன் உறக்கம் பெரியதுன்னு
உறவை மறந்திட்டியே

பெண்:

நீ கருப்பு நான் சிவப்பு
ஊரெங்கும் ஒமலிப்பு
ஓமலிப்புப் பொறுக்காமல் ஒடிட்டாலும் குத்தமில்லை

வட்டார வழக்கு: ஒமலிப்பு-ஊர்வம்பு.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
மீளவிட்டான்,
துத்துக்குடி வட்டம்,
நெல்லை மாவட்டம்.

ஆசாரக் கூடம்

நடுத் தெருவில் தண்ணீர் கேட்கும் காதலனுக்கு காதலி கூறும் விடையை முன்னர் வந்த பாடல்களில் நாம் கண்டிருக்கிறோம். இப்பாடலில் அலங்காரம் செய்யப்பட்ட மணமேடைக்கு வந்து தண்ணீர் கேட்கச் சொல்லுகிறாள் காதலி, பாடல் காதலர்களின் உரையாடல்.

காதலன்:

தீனக் கயிறு போட்டு
நின்னு தண்ணி விறைக்கும் தாளம் போட்ட கையாலே தண்ணி தந்தால் ஆகாதோ?

காதலி:

தண்ணியும் தான்தருவேன்
தாகமதைத் தீர்த்திடுவேன் கூடத்துக்கு வந்தியானா குளிர்ந்த ஜலம் நான் தருவேன்