பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248

தமிழர் நாட்டுப் பாடல்கள்


காணவில்லை. ஒரு நாள் அவள் அவனைக் காண்கிறாள். அவன் காதில் எட்டும்படி பாடுகிறாள்.

அஞ்சு பனையோரம்
ஆனைசெடி காட்டோரம்
காட்டு வழி வாரதெப்பம்
கண்டு துயரம் சொல்ல
சந்திர ரதமேறி
சாலிகுளம் வேட்டையாடி
இந்திரரே எங்க சாமி
எந்த வழி வாராரோ?
வருவாரோ இந்த வழி
தருவாரோ வெத்திலையை
தின்னுவேனோ வாய் சிவக்க
தேகமெல்லாம் பூ மணக்க
ஏறினேன் கல் கோட்டை
எடுத்தேன் மணி உருண்டை
வாங்கின மாங்கனியை
வாய் ருசிக்கத் திங்கலியே
பிறக்கின பூப்போல
பொட்டிக்குள்ள நானிருக்கேன்
வாடின பூப்போல
வாசப்படி காக்குறனே
நனையா பச்சரிசி
நார் உரியா வாழைப்பழம்
உடையாத தேங்கா கொண்டு
உறவிருக்க வாரதெப்போ?

வட்டார வழக்கு: பிறக்கின-பொறுக்கின; சந்திரரதம்சூரியனுக்குத்தான் ரதம் உண்டு. சந்திரன் ரதம் இவளது கறபனை.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. gnagogy
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம்.

என்னாலே முடியாதய்யா!

காதலி தன் தனிமையைப் போக்க இல்லறத்தில் ஈடுபடுவதற் காகத் தன்னை உடனே மணம் செய்து கொள்ள வேண்டுமெனக் காதலனைப் பல வகையாலும் வற்புறுத்துகிறாள்.