பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250

தமிழர் நாட்டுப் பாடல்கள்


அவன்:

அவன்:வெட்டுறாங்க குத்துறாங்க வேணவர்கள் சொன்னால் என்ன கம்படி விழுந்தாலும்
கனியை விடப் போறதில்லை

அவள்:

கொண்டையிலே பூவிருக்க குளத்துத் தண்ணீர் நிலம்பாய கங்கையிலே விழுந்த பூவை கிடைக்குமின்னு எண்ணாதீங்க

வட்டார வழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.

குறிப்பு: கங்கையில் விழுந்த பூ-'எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள் என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்.

சாக்குப் போக்கு!

ஒருவரையொருவர் சந்திக்க வீட்டில் பெற்றோர்களிடம் பல சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டு வரவேண்டுமெனக் காதலி அவனுக்கு பாடம் சொல்லுகிறாள். அவன் அவளுக்கு இளைத்தவனல்ல என்று அவன் பேச்சால் தெரிகிறது.

காதலி:

சலுப்பச்சட்டி ஊசி கொண்டு சாக்குத்தைக்கப் போறவரே சாக்குத்தைக்க நீங்க வாங்க சாலைப்பாதை நான் வாரேன்

காதலன்:

துக்குச்சட்டி சோறு கொண்டு சூச்சியமா வார புள்ள துரக்குச்சட்டி சோறு கொண்டு சூட்சியமா நான் வருவேன்

காதலி:

மண்வெட்டி தோளில் போட்டு மடை திறக்கப் போறவரே மடையைத் திறந்திடுங்க
மயில் வந்து நீராட

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி மாவட்டம்.