பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/253

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
253

காதல்


சாயச் சருக்குச் சேலை சாத்தனூருக் கம்பிச் சேலை ஊதாக் கருப்புச் சேலை உருக்குதடி என் மனசை கத்தாழைப் பள்ளத்திலே கண்ணெருமை மேய்க்கையிலே அன்று சொன்ன வார்த்தை யெல்லாம் அழிக்காதே பெண் மயிலே. மஞ்சள் அழிந்திடாமே-உன் மாறாப்பு மசங்கிடாமே கொண்டை உலஞ்சிடாமே கொண்ட பூ வாடிடாமே

பெண்:

மஞ்சள் அழிஞ்சிடுமே
மாறாப்பு மசங்கிடுமே
கொண்டை உலஞ்சிடுமே கொண்டவன் கையினாலே வாசமுள்ள ரோஜாவே
வாடா மரிக்கொழுந்தே
தேசமதில் உங்களைப் போல தேடினாலும் கிட்டுமோ?

வட்டார வழக்கு: சிந்து பொடி-செந்தூரம்; வலயம்ஆபரணம்; களவான-களவாட

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.

பச்சைக்குடம் கரையாதா?

அத்தை மகன் மீது காதல் கொண்டாள். அத்தைக்கும் அவர்களை மணமக்களாகப் பார்க்க ஆசை. தாய் சொல்லைத் தட்டாதவன் அவன். ஆயினும் காதலி கொஞ்சிப் பேசும்பொ ழுது குறும்பாக வேறு பெண்களை சிறையெடுக்கச் செல்லும் வீரனாகத் தன்னைக் குறித்து பேசுகிறான். அவள் கோபத்தில் பச்சை மண்ணில் சட்டி வனையும் குசவன் என்று அவனைத் திட்டுகிறாள். அவனோ தாய் சொல்லைத் தட்டாத மகன் என்று அவளுக்கு உறுதி கூறுகிறான். ASIS_17