பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தமிழர் நாட்டுப் பாடல்கள்



மானு நிறத்துக்காரி மறப்பது எக்காலம் மின்னல் வேகத்துக்கும் மீளவிட்டான் துரத்துக்கும் அன்ன நடை அழகுக்கும் ஆலவட்டம் போடுதடி

காதலி:

இருந்தா குழல் சரியும் எந்திரிச்சாப் பூச்சரியும்
நடந்தா நாடிளகும்
நான் வணங்கும் சாமிமேலே

காதலன்:

கேட்டனடி ஒரு வருஷம் கெஞ்சினனே நெஞ்சுருக மாட்டேன்னு சொன்னவளை மலத்தினனே காட்டுக்குள்ளே

காதலி:

கட்டி அழுத்துதையா
கருவமணி விம்முதையா
தோகை அழுத்துதையா
தொரை மகனே கையை விடு.

சேகரித்தவர்.
இடம்:
M.P.M. ராஜவேலு
மீளவிட்டான்,
தூத்துக்குடிவட்டம்,
நெல்லை மாவட்டம்.

போய் விடுவேன்

ஆடு மேய்க்கும் காதலியை, மலையில் மாடு மேய்க்கும் காதலன் இரவு தங்கிப் போகச் சொல்லுகிறான். அவள் மறுக்கிறாள். 'மலைக்கும் ஊருக்கும் இடையில் ஒடும் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வாய்?" என்று கேட்கிறான். அப்பாவிடம் சொல்லி கப்பல் வரவழைப்பேன் என்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமல் அவனோடு இணங்கியிருப்பது தமிழ் மரபல்ல என்று அவனுக்கு நினைவூட் டுகிறாள். தந்தையின் சம்மதத்தைப் பெற்று மணம் செய்து கொள்ள வேண்டுமென்பதைத்தான் உடனே அப்பாவிடம் சொல்லி கப்பல் செய்யச் சொல்லுவேன் என்று குறிப்பாகச் சொல்லுகிறாள்.