பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
257

காதல்


மாடுமேய்ப்பவன்:

ஆத்துக்கு அந்தப் பக்கம் ஆடு மேய்க்கும் சின்னப்புள்ளா ஆத்திலேதண்ணி வந்தா அப்பொழுது என் செய்வா?

ஆடு மேய்ப்பவன்:

ஆத்திலேதண்ணி வந்தா அப்பாவிடம் சொல்லியல்லோ அப்பொழுதே கப்பல் செய்து அக்கரையே போய் விடுவேன்.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
மீளவிட்டான்,
தூத்துக்குடி வட்டம்,
நெல்லை மாவட்டம்.

மானங் கெட்ட மச்சாவி

மாமன் மகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தார்கள். அறுவடை முடிந்ததும் திருமணம் நடை பெற வேண்டும். இதற்கிடையில் அவன் நகரத்தில் வேசியரோடு உறவு கொண்டிருக்கிறான் என்று அவள் அறிந்து கொள்ளுகி றாள். மேலும் நகரத்தில் சாமான்கள் வாங்குவதற்கென்று அவளிடம் அவன் நகைகளை வாங்கிச் சென்று வேசியருக்கு கொடுத்து விடுகிறான். கண்ணகியைப் போல 'சிலம்புள கொண்ம்' என்று கூறாமல் அவள் அவனை இடித்துக் கூறித் திருத்த முயலுகிறாள். முயற்சியில் வெற்றியும் அடைகிறாள்.

காதலி:

கணையாழிக் குச்சிபோல கடும்.உறவா நாமிருந்தோம் முக்குத்தித் தட்டுபோல முறிந்ததடா நம் உறவு!

காதலன்:

கோதி முடிந்த கொண்டை கொத்தமல்லிப் பல்லழகி நாகச் சிகப்பியடி-உன்னை நம்பியே நான் கெட்டேனடி!
குடம் எடுத்து இடுப்பில் வைத்து கோல வர்ணப் பட்டுடுத்தி
பறக்க முழிக்காதடி
படமெடுத்த நாகம் போல