பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஒரு கதை இசைக்கு மயக்கும் சக்தி உண்டு. இசை மயக்கத்தில் நாம் விரும்பாத செயல்களைக் கூடச் செய்து விடுவோம். ஒரு குருட்டுப் பாடகனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல், அவள் அவனை மணம் செய்து கொள்ள இசையவில்லை. அவளுக்கு வேறொரு வாலிபன் கணவனாக வாய்த்தான். இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். குருடனுக்குப் பொறாமை மிகுந்தது. தன்னை துன்பத்தில் ஆழ்த்திய அப்பெண்ணை இன்பமாக வாழவிடக் கூடாதென்ற நச்சு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் தம்பதிகள் இருவரும் ஒரு கிணற்று துவளத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குருடன் மறைவில் நின்று பாடினான். இன்னிசை அவளை மயக்கி உணர்விழக்கச் செய்தது. கணவன் அவளை அனைத்து இன்னிசை மயக்கத்தை கலைக்க முயன்றான். அவள் கோபமுற்று தன்னையறியாமல் அவனை உதறி விட்டாள். அவன் கிணற்றுள் விழுந்து விட்டான். அவள் மயக்கம் கலைந்து உண்மையை உணர்ந்தாள். எப்படியாவது தன் கணவனை உயிரோடு கரை சேர்க்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுகிறாள். அற்புதமான மிதவையொன்றை அனுப்புமாறு பிரார்த்திக்கிறாள். குருவி இருந்த மலை தனிலே குருடர் கவி பாடயிலே அருகிருந்த தோழனையோ-நான் அருங்கிணற்றில் தள்ளி விடடேன் சங்கு மிதவை சமுத்திரத்துத் தான் மிதவை-என் தாலிக்கு உடையவரை தள்ளிக் கரை சேராயோ? சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு தூத்துக்குடி, நெல்லை மாவட்டம். ஏன் வந்தாய்? பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஓடிவந்து மணம் செய்து கொண்ட அவர்கள், ஒரு நாள் இருவரும் பழைய நினைவுக