பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 263 பெண்: சாஞ்ச நடையழகா! சைக்கிள் ஓட்டும் சாமி ஒய்யார சேக்குகளாம் ஒலையுதில்ல சைக்கிளிலே சட்ட மேலே சட்டப் போட்டு சரிகைச் சட்ட மேல போட்டு சைக்கிளிலே போறவரே சாயாதிரும் பள்ளங்கண்டு வட்டமிடும் பொட்டுகளாம் வாசமிடும் தைலங்களாம் சாமி. கிராப்புகளாம் சாயந்திரம் நான் மடிப்பேன் அரக்கு லேஞ்சுக் காரா பறக்க விட்டேன் சண்டாளா மறக்கல என்று சொல்லி வலக்கையுமே தந்திடுவாய் ஆண்: வலக்கையும் தந்திருவேன் வருண சத்தியம் செஞ்சிருவேன் மீனாட்சி கோவிலிலே வேட்டிப் போட்டுத் தாண்டித் தாரேன். வட்டார வழக்கு: சட்ட-சட்டை, சாயாதிரும்-சாய்ந்து விடாதேயும்; செஞ்சிடுவேன்-செய்து விடுவேன். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம். முறைப் பாட்டு கை கடந்த மாயமென்ன? அவளுடைய மச்சான் ஊர் வெளிப்புறம் சாயாக்கடையில் உட்கார்ந்திருக்கிறான். அவனை வம்புக்கிழுத்துப் பேச்சுத் தொடங்குகிறாள் மாமன் மகள். அவன் விடுவானா? அவன் பதில் பேச, இவளும் பேசுகிறாள். அவள்: சாயாக் கடையிலே சமுக்கம் விரித்த பெஞ்சியிலே