பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 265 குறிப்பு: கருவமணி-இது தெலுங்கு பேசுபவர்கள் அணி வது. தமிழ் நாட்டில் செட்டியார்கள் தவிர மற்ற தெலுங்கர்கள் அணிவார்கள். அவர்களுடைய பாட்டுக்களும் தமிழ் பாட்டுக்களே. தெலுங்குப்பாட்டு, தெலுங்கு நாட்டில் உறவுடையவர்களுக்கே தெரியும். சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு தூத்துக்குடி வட்டாரம். நெல்லை மாவட்டம். கை மருந்து அவன் ஏழை கூரை வீட்டில் வாழ்பவன். காரை வீட்டு முறைப் பெண் மீது காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். இருவரும் தீவீரமாகப் போராடிப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றனர்; பெண் ஓடிவிடுவதாகச் சொன்னதற்குப் பிறகே தாய் திருமணத்துக்குச் சம்மதித்தாள். தாயை மறக்கும்படி என்ன மருந்து போட்டானோ அத்தை மகன் காரை வீட்டுக்காரியை கூரை வீட்டிற்கு வருமாறு செய்து அங்கிருந்து ரங்கூனுக்கு அழைத்துச் செல்ல அவன் செய்த வசியமென்ன? அவன் காதில் விழ அவள் பேசுகிறாள். முக்கூட்டுப் பாதையிலே மூணுபேரும் போகையிலே தாயை மறக்கச் சொல்லி தந்தானே கை மருந்து காரை வீட்டு மேலிருந்து மஞ்சள் அறைக்கையிலே கூரை விட்டு அத்தை மகன் கூப்பிட்டானே ரங்கூனுக்கு தாயை மறந்தனடா தண்டிப் புள்ளையே மறந்தேன் ஊரை மறந்தேனடா ஒரு பணத்துத் தாலிக்காக வட்டார வழக்கு: மூணுபேர்-தான், தங்கை, தாய்; தண்டிப்புள்ளை-பெரியவளான தங்கை. சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு தூத்துக்குடி வட்டாரம்.