பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 தமிழர் நாட்டுப் பாடல்கள் முறை மாப்பிள்ளை: அவன் மனைவி: பெண்களும் குடுத்துடுவா பெண் குடுத்து வாங்கிடுவா என்னைக் கொடுத்துவிட்டு இருப்பாளோ என் தேவி குலைவாழை நெல் உருவி குழையாமல் சோறு பொங்கி இலை வாங்கப் போனவரை இன்னும் வரக் காணலியே சாமியக் காணலன்னு சபைகளெல்லாம் தேடிப்பார்த்தேன் சக்களத்தி மடிமேலே சாஞ்சிருக்கும் வேளையிலே முறை மாப்பிள்ளை: மனைவி: சேகரித்தவர்; தேங்காய் முழி அழகி தெய்வக்கனி வந்து நிக்கா மாங்கா முழியழகி மடியவிடு நான் போறேன் என்னையக் கண்டொடனே கால்பதறி, கைபதறி வீட்டுக்கு வந்தொடனே விளக்கேத்தி நான் பார்த்தேன் இடம்: M.P.M. ராஜவேலு மீளவிட்டான், தூத்துக்குடி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.