பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

   தமிழர் நாட்டுப் பாடல்கள்

எனவே வியக்க இருந்தவனிடத்தில் மைத்துனனை அழைத்து மணவறை இருத்தி கலம் நிறை அரிசியில் கையினைக் கோர்த்தார் சிங்காரமாக தெய்வ சபை தனிலே கம்பர் குலம் வழங்கக் கம்பர் சொன்ன வாக்கியங்கள் வாக்கியத்தைத் தானடக்கி மங்களங்கள் தான் பாட அருமைப் பெரியோர்கள் அருமை மனை செல்லலுற்றார் கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்தார் தங்கள் தங்கத்தை தாரை செய்து கொடுத்து கைத்தாரை செய்த பின்பு

                - இன்னார் பரியம் தேதி 
        -செலுத்துவோமென்று மண்டலமறிய 

மணிவிளக்கு வைத்து கரகம் இறக்கினார் கன்னியுள்ள பாலனுக்கு புடலை தனைப் போட்டு பின்னும் தலைமுழுகி மாமன் கொடுக்கும் வரிசைகள் கேளாய் காதுக் கடுக்கன் வெள்ளிச் சரப்பனி அஷ்டக்கடகம் தோள் வார் பகம்பொன் துண்டுக் கடுக்கன் அம்மி குளவி அழகு சிறு செம்பு கட்டில் மெத்தை கன்றுடன் பால் பகவும்