பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



306

தமிழர் நாட்டுப் பாடல்கள்


பெண்
கச்சேரிக்கும் வரமாட்டேன்-போடா

கட்டி இளுத்தாலும் நான் வல்லே.
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா உன் தாலி


வட்டார வழக்கு: ஒரல்-உரல், வல்லை-வரவில்லை; கட்டினு-கட்டிக் கொண்டு; உண்ணானம்-விண்ணாமை.


குறிப்பு: தென் பாண்டி நாட்டு உழவர் சாதிகளில் 'அறுத்துக்கட்டும் வழக்கம் உண்டு. மணமுறிவு சற்று எளிதாகவேயிருக்கும். ஆனால் மணமுறிவு கோருபவர்கள் "தீர்த்துக்கட்டும் கூலி அல்லது 'அறுப்புப்பணம்" என்ற தொகையை முதல் கணவனுக்குக் கொடுத்துவிட வேண்டும், பரிசத் தொகையையும் கொடுத்துவிட வேண்டும். இவற்றைக் கொடுக்க முடியாதவர்கள் ஏராளமாக இருப்பதால், மணமுறிவு கருத்தளவில் தான் எளிது. அதைத்தான் இப்பாடலில் இரண்டாம் செய்யுளில் கணவன் 'முப்பது பணம் கொண்டு கச்சேரிக்கு வா என்று கூறுகிறான்.

சேகரித்தவர்:
இடம்:
சடையப்பன்
சேலம் மாவட்டம்.


காதோலை

புது மணப் பெண்ணுக்குத் தன் முதல் மாதக் கூலியில் கணவன் காதோலை வாங்கி வந்தான். அவனுடைய சட்டைப் பைக்குள் காதோலை கிடந்ததைக் கண்டெடுத்த மனைவி, இது எப்படி அங்கு வந்ததென்று பொய்க் கோபத்தோடு கேட்கிறாள். அவன் பாகற் கொடி பந்தலில் காதோலை காய்ப்பது உனக்குத் தெரியாதா?’ என்று கேட்கிறான்.

பெண்:



சாய வேட்டிக்காரா-நீ
சாதித் துரை மகனே
வல்லவாட்டு சேப்புக் குள்ள
வந்த தென்ன காதோலை?

ஆண்:
தண்ணிக் குடத்தாலென்

தாகத்தைத் தீர்த்த தங்கம்