பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 3.11 நாட்களுக்குப் பின் ஒரு நாள் வாலிபன், மணமான பெண்ணைக் கண்டான். அவள் நிலைக்கு வருந்தி அவன் பாடுகிறான். நெல்லுக்காகக் கொண்டையிலே தேங்காத்தண்டி பூமுடிஞ்சு படமெடுத்த நாகம் போல-என்ன பாராமலே போற புள்ள! அண்டினயே ஆலமரம் அடுத்த பலா மரத்தே புடிச்சயடி முருங்கக் கொப்பை பொல்லாத காலம் வந்து. வட்டார வழக்கு: அண்டினயே-அருகில் வந்தாய்; ஆலம ரம் அடுத்த பலா மரத்தை-பலமுள்ள மரத்தைப் பிடிக்காமல் முருங்கக் கொம்பை பிடித்தாயே, குறிப்பு: தன்னை, அவன் ஆலமரத்திற்கருகில் உள்ள பலா மரத்திற்கும், அவளுடைய கணவனை முருங்கைக் கொம்பிற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறான். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை 30 ரூபாய் பரிசம் போட்டுக் கட்டின மனைவி. அவளுக்குக் கஞ்சி காய்ச்சத் தெரியவில்லை. அலுத்து வந்த நேரத்தில் கஞ்சியாவது ஊற்ற வேண்டாமா? இந்த உதவாக்கரை பெண்ணைப் பார்த்துக் கணவன் சொல்லுகிறான். முன்னுத்தி ஒண்னு வாங்கி முடிஞ்சு கொப்பன் வச்சிக்கிட்டான் கஞ்சி காய்ச்சத் தெரியலேன்னா-உன் கழுத்தக் கட்டி நானழவா வட்டார வழக்கு: கொப்பன்-உங்கள் அப்பன். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம்.