பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 தமிழர் நாட்டுப் பாடல்கள்

மேலத் தெரு பிள்ளையாலே மேனி குலைந்ததையா

வட்டார வழக்கு: பொரணி-வீண் பேச்சு.

சேகரித்தவர்: இடம்: S.S.போத்தையா சிவகிரி.

          மலடி

மலடி தொட்ட காரியம் விளங்காது என்று சமூகத்தில் ஒரு நம்பிக்கை.மங்கள காரியங்களுக்கு அவளை அழைப்ப தில்லை.தம் குழந்தைகளை அவள் காணக் கூடாது என்று தாய்மார்கள் தமது குழந்தைகளை மறைத்து வைப்பார்கள். பிள்ளை பெற்ற மகராசிகளுக்குத்தான் மங்கள காரியங்கள் செய்வதில் வரவேற்பு உண்டு.அவர்கள் துவங்கிய காரியம் இனிது முடியும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒர் மலடி,தன்னையே நொந்து கொள்ளுகிறாள்.தான் தொட்டது விளங்காது என்று அவளே கூறுகிறாள்.

என் வீட்டுப் பக்கத்திலே அரகரா மகனே மார்க்கண்டா ஏனுாடு தான் மரடு சிவனே மரடியோட பேரைச் சொல்லி

                   - அரகரா மகனே மார்க்கண்டா 

மாடு ரெண்டு ஒட்டி வந்தேன்

             சிவனே அரகரா பாலு குடிக்கலேண்ணு அரகரா

பாலெருமை ஒட்டி வந்தேன்

                    சிவனே மரடியோட பேரைச் சொல்ல 
                   அரகரா மகனே மார்க்கண்டா-அந்த மூணெருமை தான் மரடு சிவனே மாடு போகும் வழி தனிலே 
                    அரகரா மகனே மார்க்கண்டா-நான் 

தனிக் குனம் வெட்டி வச்சேன்

                    சிவனே மரடியோட பேரைச் சொல்ல 
                    அரகரா மகனே மார்க்கண்டா-அங்க 

வந்த மாடு அருந்தலையே

                   சிவனே