பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 329 ______________________________

துணிந்து அவளிடமே தன்னை மணந்து கொள்ளச் சம்மதம் கேட்கிறான். அவளோ தமிழில் புதிய புதிய வசவுச் சொற்களைப் படைத்து, அரம்பாடும் கவிகளையும் தோற்கடிக்கும் வகையில் அர்ச்சனை செய்கிறாள்.

மாமன் மகனிருக்க மாலையிடும் சாமிருக்க ஒத்தக் கண்ணுப் பயலும் தான் உறுதி யாண்ணும் கேட்டானே பாதை பெரும் பாதை பய வயிறு குழி தாழி குழி தாழி வயிற்றுப் பய கூத்தியாளும் கேக்கானே உறக்கம் பிடிச்ச பய ஒட்டுத்திண்ணை காத்த பய கண்ணுப் பட்டை செத்த பய காட்டமென்ன என் மேலே? கூன முதுகழகா குழி விழுந்த நெஞ்சுக்காரா ஒலைப் பெட்டி வாயோட உனக்கெதுக்கு இந்த ஆசை அஞ்சரிசி பொறுக்கிப் பய ஆளைக்கண்டா மினுக்கிப் பய தேகம் குளிராட்டிப் பய தேத்துராண்டி எம்மனசை பரட்டைத் தலை முடியாம் பரிசை கெட்ட திருநீரும் வயக்காட்டு கூவை கூட வன்மங் கூறி என்ன செய்ய? முன்னத்தி ஒருக்காரா மிளகுபொடி லேஞ்சிக்காரா கழுதை உதட்டுக்காரா காரமென்ன என் மேலே சாணைக் கிழங்கெடுத்து சள்ளைப் பட்டு நான் வாரேன் எண்ணங் கெட்ட சின்னப்பய எட்டி எட்டிப் பாக்கானே எருமை உதட்டுக்காரா ஏழெருமைத் தண்டிக்காரா