பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 தமிழர் நாட்டுப் பாடல்கள்


கழுதை உதட்டுக்காரா காட்டமென்ன என் மேலே மச்சு வீட்டுத் திண்ணையிலே மத்தியான வேளையிலே கேப்பை திரிக்கையிலே கேட்டானே வாட்பெறப்பு கட்டக் கட்ட உச்சி நேரம் கரடி புலி வார நேரம் சுடுகாட்டுப் பேய் போல சுத்துரானே மத்தியானம்

வட்டார வழக்கு: கூத்தியாள்-வைப்பாட்டி, வாப்பெறப்பு -வாய்ப்பிறப்பு (சம்மதம்); சாணைக்கிழங்கு-கரிசல் நிலத்தில் வளரும் கிழங்கு. கூழாக்கிக் குடிக்கலாம்.

கூனனை, அவள் திட்டுவதற்குப் பயன்படுத்தும் வகைச் சொற்களை கவனியுங்கள்.

சேகரித்தவர். இடம்: S.S.போத்தையா விளாத்திகுளம்,

                 நெல்லை 
                  மாவட்டம்.
      சட்டம் பொருந்தாது
முறை மாப்பிள்ளைமார் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களிடம் நெருங்கி விளையாடும் உரிமை முறைப் பெண்களுக்கு உண்டு. அவர்களுடைய பேச்சில் கணவன்மனைவி உறவுக்குரிய காதல் பேச்சுக்கள் காணப்படும். மனமான காதலர்களிடையே இப்பேச்சு தாராளமாக இருக்கும். மணமாகிவிட்டால் சிறிதளவு கட்டுப்பாட்டோடு, கேலியும் கிண்டலும் ஊடாடும். இவ்வழக்கம் பண்டையக் குழுமண முறையின் எச்சம் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். முறை மாப்பிள்ளைகள் முறைப் பெண்களை, கொழுந்தி, மதினி, மாமன்கள், அத்தை மகள் என்று குறிப்பிடுவர். முறைப்பெண்கள், மாப்பிள்ளைகளை கொழுந்தன், மச்சான், கொழுந்தப்பிள்ளை என்று அழைப்பார்கள். முறைப் பெண்களும், முறை மாப்பிள்ளைமாரும் கேலியாகப் பேசிக் கொள்ளும் உரையாடல் ஒன்று இப்பாடலில் காணப்படுகிறது.