பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 335

அத்தானைக் கேலி செய்யும் உரிமை உண்டு. அவன் மேல் சந்தனத்தைக் கொட்டி, இரண்டு குங்குமக் கிண்ணங்களையும் கவிழ்க்கிறாள். அவள் தோழியரிடம் கூறுகிறாள்.

ஒரு கிண்ணிச் சந்தனம் ஒரு கிண்ணிக் குங்குமம் அள்ளி அள்ளிப் பூசுங்கோ அருணப் பந்தல் ஏறுங்க ராசாக் கணக்கிலே ராசமக்க தோளிலே பொறிச்ச பூவும் பொட்டியிலே தொடுத்த பூவும் தோளிலே ரெண்டு கிண்ணி சந்தனம் ரெண்டு கிண்ணி குங்குமம் அள்ளி அள்ளிப் பூசுங்க அருணப்பந்தல் ஏறுங்க பொறிச்ச பூவும் பொட்டியிலே தொடுத்த மாலை தோளிலே

சேகரித்தவர்: இடம்: கு.சின்னப்பபாரதி பரமத்தி,

                     சேலம் 
                   மாவட்டம்.
    
      புலி குத்தி வீரன்
 சில பெண்கள் பொய்மைப் புலி உருவம் செய்து சோளக் கொல்லையில் வைத்திருக்கிறார்கள். அப்பெண்கள், அங்கு வரும் ஆண்களிடம் அதைக்காட்டி பயமுறுத்துகிறார்கள். தங்களைப் பயமுறுத்தும் பெண்களின், போக்கில் சந்தேகம் கொண்டு, ஒருவன் போலிப் புலியை நெருங்குகிறான். உடனே அப்பெண்கள் அவனைக் கேலி செய்து பாடுகிறார்கள்.

காடுகத்தி வேலியாக்கி கள்ளரைக் குத்தி பயங்காட்டி கோடும் புலி குத்தி சோடித்து வருவதைப் பாருங்கடி பக்கத்து மரத்திலே புலி கிடக்குது நித்திரை போவதைப் பார்த்துச் சுடு மதுரைக்குப் போற அண்ணங்களே என்னென்ன அடையாளம் கண்டு வந்தே?