பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 373 புகழ் விளங்க கோயில்களுக்கு மதிற்சுவர்களும், கோயில்களும் கட்டினார்களேயன்றி ராணி மங்கம்மாளைப்போல ஒரிருவர்தான் மக்கள் நலன் கருதி பொதுப்பணிகள் செய்தார்கள். முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போதும், ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போதும் மக்களைத் திரட்டி எதிர்த்த சிற்றரசர்கள் தோல்வியுற்று மறைந்துவிட்ட போதிலும் நாட்டுப் பாடல்களில் அவர்கள் அழியாத இடம் பெற்றார்கள். ஆனால் மக்கள் நலன் கருதாது இன்ப வாழ்க்கை நடத்தி மறைந்துபோன மன்னர்கள் நாட்டுப் பாடல்களில் இடம் பெறவில்லை. மதுரைக் கோபுரம் கட்டிய மன்னனொருவன், சாலையில் தங்கும்விடுதி கட்டி, தண்ணீர்ப் பந்தலும் வைத்ததால் இந் நாட்டுப்பாடல் புகழ்ந்து போற்றுகிறது. மதுரைக் கோபுரம் கட்டியதைவிட 'தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கிற தருமம் தான் பெரிதென்று இந்நாட்டுப் பாடல் கூறுகிறது. கல்லுமே கல்லுமே கல்லுருட்டி கல்லுக்கும் கல்லுக்கும் எணை கூட்டி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மன்னவன் வாரானாம் பாருங்கடி சன்னலு, பின்னலு சாலையிலே தங்கு மடம் ஒண்ணு கட்டி வச்சி தவிச்ச வாயிக்கி தண்ணி குடுக்கிற தரும துரையும் வாராராம். சேகரித்தவர்: இடம்; அரூர் S.S.சடையப்பன் தருமபுரி மாவட்டம்

   தண்ணீரா வேண்டும்

கிராமத்தில் ஒரு விழா. பெண்கள் கூடி கும்மி அடிக்கிறார்கள். அவர்களது பாட்டைக் கேட்கவும், நடனத்தைப் பார்க்கவும் ஒரு இளைஞன் அருகில் வருகிறான். பொதுவாக ஆண்கள் அங்கு போவதில்லை. அது கிராமத்தின் வளமையான எழுதப்படாத சட்டம்; அதை மீறுவதற்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் இளைஞன். வாழைப்பழம், சர்க்கரை, எள்ளுருண்டை யெல்லாம், தின்றதால் விக்கலெடுக்கிறதாம், தண்ணீர் வேண்டுமாம். அவர்கள் வெளிப்படையாகவே "முந்தாணி தட்டும் தூரத்தில் நெருங்க வேண்டாம், தள்ளி முக்காலிபோட்டு உட்காரவேண்டும்” என்று கூறுகிறார்கள். மூக்கறுக்கப்பட்ட