பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 தமிழர் நாட்டுப் பாடல்கள் மன்னவனே சாமி எண்ணிப் பாத்துச் சொல்லுகிறோம் கண்ணான நாதா ஊத வந்த மக்களாம் கண்ணான நாதா கொட்ட வந்த கோயில் மேளம் கண்ணான நாதா-என் கொல்லன் மேடு தாண்டலியே கண்ணான நாதா மன்னவன் சாமி மாலையிட்ட நாள் மொதலா கண்ணான நாதா-என் மன்னவனே சாமி மண்ணெடுக்க காலமாச்சே கண்ணான நாதா கூரையிட்ட நாள் மொதலா கண்ணான நாதா என் மன்னவனே சாமி கூலி செய்யக் காலமாச்சே கண்ணான நாதா வட்டார வழக்கு: கூரை-திருமணச்சேலை. சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் சேலம் மாவட்டம்.

  தாலிப் பொன்னிலும் 
    மாப்பொன்னு

தாய் தங்கம் கொடுத்து நகை செய்யச் சொன்னாலும், பான் வேலை செய்யும் தட்டான் பழக்க வசத்தால் சிறிதளவு பொன் கவர்ந்து கொள்வான் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. பெண் வழக்கமாக ஒரு ஆசாரியிடம் நகை செய்யக் கொடுக்கிறாள். ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லி, கொடுத்த தங்கத்தைவிட எடை குறைவாக ஆசாரி நகை செய்து தருகிறான். மற்ற நகைகளில் சிறிதளவு தங்கம் குறைந்ததைக் கண்டு கோபப்படாத அவளுக்குத் தாலியில் தங்கம் குறைவதைக் கண்டு கோபம் வருகிறது. தாயின் கோபத்தை இக் கும்மி வெளியிடுகிறது. கம்மலுக்கு அரும்பு வச்சாண்டி ஆச்சாரியண்ணன், ஆரழகன்