பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378 வட்டார தமிழர் நாட்டுப் பாடல்கள் மாடு துண்ணி, மாடு துண்ணி வெள்ளைக்காரன்-ஏலமா ஏலம் மாயமாத்தான், மாயமாத்தான் கிணியிறங்கி கிணியிலத்தான்; கிணியிலத்தான் எறங்கும் போது ஏலம், ஏலம் தாயாரையும், தாயாரையும் நினைக்கிறேண்டி ஊசி போல, ஊசி போல டமார் கொண்டு ஏலமே ஏலம் ஒதுக்கி விட்டான், ஒதுக்கி விட்டான் பொன்னுங்கல்லே கல்லை யெல்லாம், கல்லை யெல்லாம் ஒண்ணாச் சேத்து ஏலமே ஏலம் கப்பலுல கப்பலுல ஏத்திட்டானாம் வட்டார வழக்கு: துண்ணி-தின்னி; கிணி-இறங்கு பொறி; டமார்-வெடி மருந்து. சேகரித்தவர்:கவிஞர் சடையப்பன் இடம்:கொங்கவேம்பு தருமபுரி மாவட்டம்.

    இனிக்கும் பாகற்காய்

பாகற்காய் விற்பவள் அதன் கசப்பு ருசியை மாற்ற இனிப்பான பாடலொன்றைப் பாடுகிறாள்.

ஒரு கொடியை தூக்க தூக்க ஓராயிரம் பாவக்காய் சட்டியிலிட்டப் பாவக்காய் சட்டி தாளிச்சப் பாவக்காய் அரிக்கப் பொரிக்கச் சொல்லி அய்யன் தின்ன பாவக்காய் அப்பிடியாக் கொத்த பாவக்காய் அஞ்சு பணத்துக்கு மாத்துலாம்