பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384 தமிழர்நாட்டுப் பாடல்கள்

ஆத்து மணலிலே கோட்டைக் கட்டி அஞ்சாறு மாசமா சண்டை செஞ்சு வேத்து முகம் பட்டு வாராரோ துரை வெளிச் சுங்கெடுத்து வீசுங்கடி

வட்டார வழக்கு சுங்கு - விசிறி. சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் இடம்: அரூர் தருமபுரி மாவட்டம்.

கும்மி

கும்மிக்குப் பல நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் பொருளாக வரலாம். குத்து விளக்கேற்றி மங்கல விழாக்களில் பெண்கள் கும்மியடிக்கிறார்கள். நிலாக் காலங்களில் விளையாட்டுக்காகவும் கும்மியடிப்பதுண்டு.

கீழ்வரும் கும்மிப் பாட்டில் காதற் குறிப்புள்ள பல பாடல்கள் ஏற்கனவே சில தொகுப்புகளில் வெளிவந்துவிட்டன. இதுவரை வெளிவராத பாடல்களை மட்டும் கீழே தருகிறோம்.

கும்மியடி பெண்கள் கும்மியடி - இரு பாதம் காணவே கும்மியடி நம்மையாளும் காடவ ராஜனை நாடிக் கும்மியடியுங்கடி இந்த நிலாவும் நிலாவுமில்ல - புள்ள நித்திரைக் கொத்த நிலாவுமில்ல இந்த நிலாவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் சம்பந்த முண்டோடி வீராயி? ஒரு வருசமா: ஒண்ணரை மாசமா எண்ணெயும் தேய்த்து முழுகாம சடைவளர்ந்ததும் சன்னியாசியானதும் சபத முண்டோடி வீராயி? காக்காச்சோளம் கருஞ்சோளம் - புள்ள காசுக்கு ஒரு படி விக்கயிலே துடி துடிச்சவன் துள்ளு மீசைக்காரன் துட்டுக் கொருபடி கேக்கராண்டி