பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழவும் தொழிலும்

399


நெருக்கி நடவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான். அவர்க ளுக்குக் கோபம் வராமல் இருக்க நயமாக அவர்களுடைய அழகை அவர்களது காதலன் புகழ்ந்து போற்றுவதாகச் சொல்லுகிறான். ஒருத்தியின் தண்டைக்கால் அழகைக் கண்டு அவளது காதலன் ஐந்து மாதம் கொஞ்சினானாம். மற்றொருத்தி யின் கொண்டை அழகைக் கண்டு அவளது காதலன் ஆறுமாதம் கொஞ்சினானாம். இவ்வாறு அவர்களது உள்ளத்தைக் குளிர் வித்து தன் ஏழ்மை நிலையையும் சொல்லி நெருக்கி நட வேண்டிக் கொள்கிறான்.

                   நாலு மூலை வயலுக்குள்ளே 
                   நாத்து நடும் பொம்பிளே 
                   நானும் கொஞ்சம் ஏழையடி 
                   நடவு கொஞ்சம் செறுத்துப் போடு 
                   நண்டு சாறு காய்ச்சி விட்டு 
                   நடு வரப்பில் போற பெண்ணே-உன் 
                   தண்டைக் காலு அழகக் கண்டு 
                   கொஞ்சுறானாம் அஞ்சு மாசம் 
                   நானும் கொஞ்சம் ஏழையடி 
                   நடவு கொஞ்சம் செறுத்துப் போடு 
                   பெண்டுகளே! பெண்டுகளே! 
                   தண்டு போட்ட பெண்டுகளே!-உன் 
                   கொண்டை அழகைக் கண்டு 
                   கொஞ்சுறானாம் ஆறுமாசம் 
                   நானும் கொஞ்சம் ஏழையடி 
                   நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

உதவியவர்: இடம்: செல்வராஜு மடகாசம்பட்டி,

சேகரித்தவர்: சேலம் மாவட்டம் கு. சின்னப்ப பாரதி

நடுகை-4

ஆவுடைத் தங்கம் என்ற பெயருடைய சங்கரன் கோவில் தெய்வம் ஆவுடையம்மன். கூட்டமாக நின்று வயலில் பெண்கள் நாற்று நடுகிறார்கள். கூட்டமாக வேலை செய்யும் பொழுது உற்சாகம் பிறக்கிறதல்லவா? அதுவும் வேலைக்குரிய கூலியைக் குறைக்காமல் அன்போடு அழைத்துக் கொடுக்கும் ஆவுடைத்