பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவும் தொழிலும்


403
களை எடுத்தல்-4

களை எடுத்துக் கை கழுவி
கரை வழியா போற புள்ளா பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்கு பால் குடம் கொண்டு போறியா

சேகரித்தவர்: M.P.M.ராஐவேலு

இடம்:

மீளவிட்டான்,

துத்துக்குடி,

நெல்லை மாவட்டம்.
நச்சுப்புல்
களையெடுப்பு

பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல்லை நறுக்கித் தள்ள வேண்டும். நன்மை வளர வேண்டுமானால் தீமை ஒழிக்கப்பட வேண்டும். இதில் சமரசமேயில்லை. நமது புராணங்கள், நாட்டுக் கதைப் பாடல்களெல்லாம் இதைத் தானே கூறுகின்றன; கண்ணன் நரகாசுரனைக் கொன்றான்; முருகன் சூரபத்மனைக் கொன்றான். நீதிக்கும் அநீதிக்குமிடையே சமரசமேது?

பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல் அழகாக இருந்தால் கூட, அவை அல்லியும் தாமரையுமாக இருந்தால் கூட அவற்றைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். விவசாயி இவ்வுண்மையை அறிவான்.

பழமரத் தோட்டத்தைப் பாதுகாக்கும் உழவன் தனக்கு துணையாக உழைக்கும் உழவர்களிடம் களை வெட்டச் சொல்லுகிறான்.

ஆத்துக்குள்ளே ஏலே லேன் அத்திமரம் அகில கிலா அத்திமரம்
அளவு பாத்து ஐலப்பிடி அறுக்கித் தள்ளு அகிலகிலா அறுக்கித்தள்ளு
குளத்துக் குள்ளே ஏலேலோ கொய்யாமரம் அகிலகிலா கொத்தித் தள்ளு