பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
419

உழவும் தொழிலும்


இருக்கச் சொல்லிப் போன இளமயிலைக் காணோம் இருபதிகா ஆறு இருபதிகா ஏழு இருபதிகா எட்டு இருட்டு வழி போனால் இருட்டு வழி போனால் விரட்டுவாண்டி கள்ளன் இரும்பு வெள்ளித்துரணாம் துலுக்கன் பள்ளிவாசல் இருட்டி வந்த மேகம் மிரட்டி மழை பெய்ய மூங்கில் இலைமேலே துங்கும் பனிநீரே காலம்பர வேளை சாயும் கதிரோனே

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
விளாத்திகுளம்,
நெல்லை மாவட்டம்.

ஏற்றப் பாட்டு-3

ஏற்றம் இறைக்கும் மாமன் மகனின் புகழை ஒர் இளம் பெண் பாடுகிறாள். ஏற்றத்தின் அசைவைச் சந்தமாக்கி அதற்கேற்றாற்போல் அவள் கை கொட்டிப் பாடுகிறாள். அவன் பாட்டில் ஈடுபட்டு நேரம் போனதே தெரியாமல் ஏற்றம் இறைக்கிறான். அவன் இறைத்த் நீர் மஞ்சள் கொல்லைக்கும், கொய்யாத் தோட்டத்திற்கும் பாய்கிறது.

காதலன்: பட்டுப் பையாம் வெள்ளிக் குச்சாம் தில்லாலங்கிடி லேலம் பதினாறு வெத்திலையாம் தில்லாலங்கிடி லேலம் சின்னப் பையன் குடுத்த பை தில்லாலங்கிடி லேலம் சிரிக்கு தோடி இடுப்பு மேலே தில்லாலங்கிடி லேலம்

காதலி: மலையோரம் கெணறு வெட்டி தில்லாலங்கிடி லேலம்