பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



422

தமிழர் நாட்டுப் பாடல்கள்


துரக்கி விடும் கொத்தனரே தோப்புக் களம் போய்ச் சேர

(ஆண்)

நெல்லுக் கருதறுத்து
நிமிர்ந்து நிற்கும் செவத்தபுள்ள-என் சொல்ல மறந்திராத-நீ சொன்னபடி நானிருப்பேன்

(பெண்)

தும்ப மலர் வேட்டி கட்டி
தூக்குப் போணி கையிலேந்தி வாராக எங்க மாமன்
வட்டம் உதறுதற்கே

(வேறு)

நாலு மூலை வயலுக்குள்ளே
நாற்று நடும் குள்ளத்தாரா குலுங்குதோடி குண்டஞ்சம்பா உன்னரிவாள் என்னரிவாள் உருக்கு வச்ச கருக்கரிவாள் சாயப்பிடி அரிவாள்
சம்புதடி நெல்லம் பயிர் வெள்ளிப்பிடி அரிவாள்
விசுதடி தெல்லப் பயிர்
அறுப் பறுத்து திரித்திரிச்சு அன்னம் போல தடை நடந்து சின்னக் கட்டா கட்டச் சொல்லி சிணுங்கினானாம் பொன்னியம்மா
விதியிலே கல் உரலாம்
விசி விசிக் குத்துராளம்
கையைப் புடிக்காதீங்க கைவளையல் நொறுக்கிவிடும் கண்ணாடி வலைவிதொட்டு கருதறுக்கப் போற பின்ன கண்ணாடி மின்னலுல
கருதறுப்பு பித்துதடி