பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424

தமிழர் நாட்டுப் பாடல்கள்


தேயிலைத் தோட்டம்

புழுதி புரளுதய்யா!

ஓர் இளம் பெண் புதிதாக தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சேருகிறாள். அதற்கு முன் அவள் நதியோரம் கிராமத்தில் நன்செய் நிலத்தில் பாடுபட்டவள். அவளுக்கு பழைய வேலைக்கும் புதிய வேலைக்கும் இருக்கிற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. முள்ளடர்ந்த காட்டில், குளிர்காற்று வீச உடல் புழுதியால் மறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தனியாக நின்று வருந்துகிறாள்.

மூணாறு சாலையிலே
முள்ளடர்ந்த காட்டுக்குள்ளே
பொன்னான மேனியெல்லாம்
புழுதிபெறளுதய்யா

சேகரித்தவர்: இடம்:


S.M கார்க்கி சிவகிரி

வண்டிக்காரன் காதலி

வண்டிக்காரன் பாரமேற்றிக் கொண்டு அயலூர் போகிறான். பாரம் விலையானால் அவளுக்கு அணிகள் வாங்கி வருவதாகச் சொல்லுகிறான்.

அவள் அழைத்துச் செல்லாமல் பசப்பு வார்த்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறாள்.

மேலும் அயலூரிலே தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை வேறுபட்ட இரு உவமைகள் மூலம் வற்புறுத்துகிறாள். அவனை ஐந்தாறு பசுக்கள் நடுவிலுள்ள காளையாகவும் உவமிக்கிறாள். போதாதோ? அவன் இச்சூட் டையே நினைத்துக் கொண்டு திரும்பி வந்துவிட மாட்டானோ? வண்டி செல்லும் ஊர்களின் பெயர்களும் பாரம் எதுவென்பதும், பாடும் பகுதிகளைக் குறித்து மாறுபடும்.

வண்டிக்காரன்:

 கடலபுடிச்ச வண்டி
கம்பத்துக்குப் போறவண்டி
கடலை விலையான-உனக்கு
கடகம் பண்ணி
நான் வருவேன்