பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/429

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உழவும் தொழிலும் 44.1

           நரிக் குறவன்

குறவர் வாழ்க்கையிலுள்ள சுதந்திரம் தமிழ்க் கவிகளை கவர்ந்திருக்கிறது. காதல் நூல்களையும், பக்தி நூல்களையும் குறவன் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்துச் சமய குரவர்களும், கவிஞர்களும் எழுதியுள்ளனர். நம்மாழ்வார் குறம், மீனாட்சியம்மை குறம் முதலியன குறத்தி குறி சொல்லுதலைப் பின்னணியாக கொண்ட பக்தி நூல்கள். குற்றாலக் குறவஞ்சி போன்ற இசை நாடக நூல்களும் குறவன் குறத்திக் காதலையும், இறைவன் மீது சீவன் காதல் கொள்ளுவதையும் பொருத்தியும், வேறுபடுத்தியும் காட்டுகிறது. இதற்குக் காரணம் தமிழ் மணமுறையில் தோன்றிய களவு மணமும், இயற்கைப் புணர்ச்சியும் குறிஞ்சி நில மக்களின் வழிவந்த குறவர்களிடம் அழியாமல் காணப்பட்டது. நாகரிக வாழ்க்கையில் காதல் மடிந்துவிட்ட பிறகு அதை நினைந்து ஏங்குபவர்கள் குறவரது காதல் வாழ்க்கையை வியந்து போற்றினார்கள். ஆனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையின் கடுமையை இக் கவிஞர்கள் அறியவில்லை. கீழ்வரும் பாடல் அவர்கள் அன்றாட உணவி னைப் பெற என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கூறுகிறது.

ததிம்மிதா குடதகதா-தக

தத்தாரித்த கிடதக-ததிமி

குருவிக்காரர் நாங்களய்யா-இந்தக்

குவலயக் காட்டினில் குடியிருப்போம்

அரிதாகிய புலி சிறுத்தை

செந்நாய் ஓநாய்களை

நாங்கள் பிடிப்போம்-ததிம்மிதா

கூவி வரும் குள்ளநரி

கோனாயி நொள்ள நரி

கல்லின் கீழ் மேஞ்சு வரும்

கல்ல மொசல் பில்ல மொசல்

கண்டு பிடிப்போம்-மார்....ரோ

காடை கெளதாரி மைனா

கானாங் கோழி குருவிகளாம்

கண்டு பிடிப்போம்-ததிம்மிதா

அண்டத்தில் வலையைக்கட்டி

ஆகாயம் பறந்து வரும்

ஆண்கழுகு பொண் கழுகு

நாங்கள் புடிப்போம்-மார்....ரோ