பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

தமிழர் நாட்டுப் பாடல்கள்


தென்னிந்திய அரசியல் அரங்கத்தில் ஆங்கிலேயர் ஆதித்த, ஓங்கியபோது டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரோடு வியாபாரப் போட்டியில் தோல்வியுற்றுக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து வெளியேறினர்.

தமிழ் நாட்டுப் பரதவர் வீரம் மிகுந்தவர்கள். திறமை மிக்கவர்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள்.

அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் கடலில் கழியும். இன்னும் அவர்கள் மீன்பிடித்தல், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் முதலிய தொழில்களையே பெரும்பான்மையாகச் செய்து வருகின்றனர். 1533 க்கு முன்பாக அவர்கள் கடலன்னை என்னும் கடல் தெய்வத்தையும், வருணன், இந்திரன் போன்ற புராண தெய்வங்களையும், முருகன் என்ற தமிழ் தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறார்கள். கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டாள். பழங்காலத்தில் கடல் பயணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்துகொண்டார்கள் என்பதற்கறி குறியாக அவரது பாடல்களில் வேலனும், அல்லாவும் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகச் சொல்லப்படுகிறது. அவர்களுடைய பாடல்களில் ஆபத்திலிருந்து காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுகிறார்கள். வீட்டிலுள்ள மனைவியையம் குழந்தையையும் பற்றி அன்போடு எண்ணிப் பார்க்கிறார்கள். அவர்கள் படகைக் கடலிலிறக்கும் பொழுதும், கரையிலேற்றும் பொழுதும், தண்டு வலிக்கும் பொழுதும், பாய்மரத்தை மேலேற்றி இறக்கும்பொழுதும், கடலில் போட்ட வலையை இழுக்கும்பொழுதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த உழைப்போடு கலந்துதான் அவர்கள் பாடல் வெளியாகி றது. கடலில் செல்லும்பொழுது பல மணி நேரம் ஒருவர் மாறி ஒருவர் பாடிக் கொண்டேயிருப்பார்களாம். இம் மக்களின் பாடலுக்கு 'அம்பாப் பாடல்’ என்று ஏன் பெயர் வந்தது என்று காரணம் சொல்வது கடினம். ஆனால் கடல் தெய்வம் கடலன்னை என்று அழைக்கப்பட்டதாலும், பின்னர் அத்தெய் வமே கன்னிமா என்று அழைக்கப்பட்டதாலும் இப்பாடல்கள் அம்பாள் பாடல்கள் என்று இருக்கலாம் என்று சொல்லப்படுகி றது. அம்பாள் என்னும் பெயர் பொதுவாகப் பெண் தெய்வத்தைக் குறிக்கும்.