பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460 தமிழர் நாட்டுப் பாடல்கள் அல்லி படும் பாதரவை அருச்சுனரே பார்க்கலியோ வட்டார வழக்கு : பலுமாற- பரிமாற; தோத்தேன் -இழந்தேன்; மருவு-மருக்கொழுந்து: குளிப்பாட்ட-கணவனைக் குளிப்பாட்ட; அல்லி-தன்னைக் குறிப்பிடுகிறாள்;பாதரவு-துன்பம். சேகரித்தவர்: S.M.கார்க்கி இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.

   கார் விபத்தில் இறந்தான்

ஒரு காரில் தனது எசமானனுடன் வேலைக்காரன் சென்றான். கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. வேலைக்காரன் இறந்துபோனான். போலீசுக்காரர்கள் நொறுங்கிய காரையும், பிணத்தையும் சுற்றி நின்றார்கள். பெருங்கூட்டம் கூடிவிட்டது. டிரைவரும், எசமானும் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்து போனவனுடைய மனைவிக்குச் செய்தி அனுப்பப்பட்டது. அவள் அழுதடித்துக் கொண்டு ஓடி வந்தாள். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவள் உள்ளே செல்ல முடியவில்லை. அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அவள் அதிகாரிகளை அழைத்து தன்னை உள்ளே விடும்படி கதறினாள். அதிகாரிகள் அவளை உடனே அழைத்துவர உத்தரவிட்டனர். இது போன்ற ஒப்பாரிகள் மிகவும் அபூர்வமானவை. சாஞ்ச பணிகளாம் சத்தமிடும் மோட்டாராம் சத்தமிடும் மோட்டாரில் சாஞ்சிருந்த மன்னரெங்கே? சாஞ்சிருந்த மன்னருக்கு தயவு சொன்ன டிரைவரெங்கே? சத்தமும் ஆனதென்ன?-இதில் உயிர்க்கொலையும் ஆனதென்ன? ஜனத்தை விலக்கிவிடு தாசில்தார் என் தகப்பா காசு கொண்டு வந்த-என் தருமரவே நான் பார்க்க