பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 தமிழர் நாட்டுப் பாடல்கள் எறும்பு மொகராத எண்ணி லட்சம் பூவெடுத்து பாம்பு மொகராத பத்து லட்சம் பூவெடுத்து வாரி வந்த பூவையெல்லாம் வலப்புறமாய்க் கொட்டி வச்சேன் கொண்டு வந்த பூவையெல்லாம் கோபுரமா கொட்டி வச்சேன் குளத்திலே ஸ்நானம் பண்ணி கோலு போல நாமமிட்டு ஆத்துலே ஸ்நானம் பண்ணி அருகு போல நாமமிட்டு பொழுதேறிப் போகுதிண்ணு வெள்ளியொறைச்சி நாமமிட்டு இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணிப் பிள்ளையார்க்கு வட்டார வழக்கு மேற்காண்டே-மேற்கில் வெப்பாலை வேம்பு நிமித்தியம்-நைவேத்தியம்,மொகராத-முகராத, ஒரைச்சி. உரைத்து. பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் முறை. தீ வளர்த்து 'ஓமம் வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால், தமிழ் உழவர் பெரு மக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை. சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் கொங்க வேம்பு, அரூர் வட்டம், தர்மபுரி மாவட்டம். ஆண்டிற்கொரு விழா நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி திண்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்ட்ங்களை