பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476 தமிழர் நாட்டுப் பாடல்கள் மலையைக் கரியாக்கி மாணிக்கச் சங்கூதி சமுத்திரத்தில் நீர் மோந்து குருவன் குழையடுக்கி கும்பினியார் கொள்ளிவைக்க கருங்கடல் நீந்தி கர்னல் குடம் எடுத்து தாமரை நூல் போட்டு சமத்தன் தலை விரிச்சு பிறந்தாரைப் பாக்கலியே தேரூத்தாம் தண்ணியாம் பெருங்குளத்து மாவிலையே-பிறந்த வாசலில வேதனையா நிண்ணழுதோம் செம்பு தூக்கி செவந்தி மாலையிட்டு-தெருவில வாரயில தேசத்தோடு நிண்ணழுதோம்! செகப்பு ரயிலேறி-நீ வாழ்ந்த சீமைக்கே வந்தாலும் சீலை எடுத்திருவ சிறு நகையும் செய்திருவ-நான் சில எடுத்துக் கட்டி சிறு நகையும் மேல் பூட்டி-நீ வாழ்ந்த சீமைக்கே வந்தாலும் சீமையிலே பேஞ்ச மழை சீலையும் நனைஞ்சிருச்சே சிறு நகையும் மங்கிருச்சே பொன்னும் ரயிலேறி-நீ வாழ்ந்த பூமிக்கே வந்தாலும் புடவை எடுத்திருவ பொன் நகையும் போட்டுருவ-நான் புடவை மடிச்சுக்கட்டி பொன் நகையும் மேல் பூட்டி-உன்னோட சீமைக்கே வந்தாலும் சீமையில் பேஞ்ச மழை புடவையும் நனைஞ்சிருமே பொன் நகையும் மங்கிருமே பச்ச ரயிலேறி நீ இருக்கும் பட்டணமே வந்தாலும்